திடீரென மைத்திரியைச் சந்தித்துள்ள சீனத் தூதுவர்!

0
83

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் இன்றையதினம் திடீரென (09) சந்தித்துள்ளார்.

இவர்கள் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கலந்து கொண்டிருந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.