மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினராக சிவநாதன் மேகராஜ் தெரிவு

0
179

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர் சிவநாதன் மேகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபையின் கறுவப்பங்கேணி வட்டார உறுப்பினர் வே.தவராஜாவின் இடத்திற்கே குறித்த உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளரினால் தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனிடமிருந்து அதற்கான நியமன கடித்தினைப்பெற்றுக்கொண்டதுடன் புதிய உறுப்பினருக்கு மாநகரசபை உறுப்பினர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் ஆணையாளர் மதிவண்ணன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றதுடன்,இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.