ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா! ரஷ்யாவுக்கு விழுந்த பேரடி

0
71

உக்ரைன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து இன்று ஏப்ரல் 7ம் திகதி இடை நீக்கம் செய்துள்ளது ஐ.நா. பொதுச் சபை.

இந்த தகவலை ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவை மனித உரிமை சபையிலிருந்து நீக்குவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமெரிக்கா தலையைில் 93 நாடுகள் ஆதரவாகவும் 28 நாடுகள் எதிராகவும் 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தன.

வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய ஐ.நா.விற்கான ரஷ்யாவின் துணை தூதர் ஜெனடி குஸ்மின், இந்த நடவடிக்கையை “சட்டவிரோதமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை” என்று விவரித்தார், பின்னர் ரஷ்யா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் துன்பங்கள் புறக்கணிக்கப்படாது என்ற தெளிவான செய்தியை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பியுள்ளது” என்றார்.

இதேவேளை வாக்கெடுப்பு அல்லது வாக்களிக்காமல் இருப்பது இருதரப்பு உறவுகளுக்கான விளைவுகளுடன் “நட்பற்ற சைகையாக” பார்க்கப்படும் என்று ரஷ்யா மேற்குறித்த நாடுகளை கடுமையாக எச்சரித்துள்ளது.