விஜய்யை தாக்கி பேசிய ப்ளூ சட்டை மாறன்! பீஸ்ட் ரிலீஸுக்கு முன்பே இப்படியா

0
175

நடிகர் விஜய் சமீபத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

ஸ்டாலின் – விஜய் சந்திப்பு

விஜய் மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வர அந்த நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வர இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

பீஸ்ட் படம் ரிலீஸ் ஆக சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஒரு சந்திப்பு திடீரென சந்திப்பு நடந்தது எதேச்சையான ஒன்று தானா என கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் விஜய்யை விமர்சிக்கும் வகையில் சினிமா விமர்சகர் மற்றும் இயக்குனரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கிறார்.

விஜய் புதுவை முதலமைச்சரை சந்தித்த நிலையில் புதுச்சேரியில் மட்டும் பீஸ்ட் படத்திற்கு மூன்று மடங்கு கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

“தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – தமிழக மக்கள் கேள்வி” என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு உள்ளார்.