அமெரிக்காவில் நீதிபதியாகும் கறுப்பின பெண்

0
651

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக கேடாண்சி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க செனட் வாக்கெடுப்பில் 53 – 47 வாக்குகள் என வித்தியாசத்தில் ஜாக்சனுக்கு வாக்குகள் கிடைக்க, அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதி ஆவது உறுதிசெய்யப்பட்டது.

கேடான்ஜி பிரவுன்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கேடன்ஜி பிரவுன் ஜாக்ஸன், 51, என்ற கறுப்பினத்தை சேர்ந்த பெண்ணை நியமிக்க, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அமெரிக்க பார்லி.,யில் செனட் உறுப்பினர்களிடையே இதற்கான வாக்கெடுப்பு நேற்று துவங்கியது. அதிபர் பைடனின் இந்த முடிவை, ஜனநாயக கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது.

நாட்டில் 94 சதவீத வெள்ளை அமெரிக்கர்கள் வசிக்கும் போது வெறும் 6 சதவீதம் மட்டுமே இருக்கும் கறுப்பினத்தவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதனால், குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் ஓட்டுகள் தவறாமல் கிடைக்கும் பட்சத்தில் கேடன்ஜி நீதிபதியாக செனட் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவ்வாறு தேர்வு பெற்றால், நீதிபதி ஸ்டீபன் பிரேயர், 83, என்பவர் ஓய்வு பெற்றவுடன் கேடன்ஜி, பொறுப்பேற்றுக் கொள்வார்.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கறுப்பினத்தை சேர்ந்த ஆண் நீதிபதிகள் ஏற்கனவே பணியாற்றி உள்ளனர். கேடன்ஜி முதல் கறுப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை அடைவார்.இவருக்கு முன்பாக இரு கருப்பின ஆண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வாழ்நாள் நியமனமாகும். தற்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 6வது பெண் நீதிபதியாக இருப்பார்.

உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது அமெரிக்க வரலாற்றில் முக்கிய தருணம். அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்திலும் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நீதிபதி ஜாக்சன் சிறந்த நீதியரசராக விளங்குவார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவருடன் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுப் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒரே நீதிபதி இவர்தான் என்று கூறப்படுகிறது.