பீஸ்ட் இந்த ஹாலிவுட் படம் மாறி தான் இருக்கும்! – இயக்குனர் நெல்சன்

0
211

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படம் வெளியாகி இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் பீஸ்ட் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படத்தின் முதல் நாள் காலெக்ஷன் சர்கார், வலிமை உள்ளிட்ட படங்களின் சாதனையை கண்டிப்பாக முறியடிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் இப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

“பீஸ்ட் படத்தில் விஜய் RAW ஏஜென்ட் அதிகாரியாக நடித்துள்ளார், மேலும் இப்படம் ஒரு வித்தியாசமான James Bond படமாக இருக்கும். இப்படத்தின் கதை விஜய் சாரை மனதில் வைத்து எழுதப்பட்டது, அவர் கதை சொல்லும் பாதியிலேயே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என நெல்சன் தெரிவித்துள்ளார்.