13ஆம் திகதி முதல் 15ம் திகதி வரை மின்சார விநியோக தடை இல்லை!

0
83
Powe cut shedule

எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஏப்ரல் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் 4 மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 16ஆம் திகதியும் 17ம் திகதியும் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது