தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் – குணா கவியழகன்

0
355

தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றார் புலம்பெயர் அரசியல் ஆய்வாளரான குணா கவியழகன்.

இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அரசாங்கத்திற்கு எதிரா போராட்டங்கள் பற்றி அவர் வெளியிட்டுள்ள ஒரு ஒளியாவணத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார.

‘தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதில் அர்த்தமில்லை. அது ஆபத்தானதும் கூட. திரை மறைவு நிகழ்ச்சி நிரலால் தமிழ் இளைஞர்கள் போராட தூண்டப்படுகிறார்கள். சிங்கள கட்சிகள் ஆட்ச்சியை கவிழ்க்கவும் தமது செல்வாக்கை உயர்த்தவும் போராட்டம் நடத்துவார்கள். மக்களை தூண்டுவார்கள். வெளிநாட்டு சக்திகளும் பின் நிற்கும். அதற்கு தமிழர்கள் பயன்படுவது அரசியல் திசை திரும்பும் ஆபத்தை உருவாக்கலாம்’ எனவும் அவர். எச்சரிக்கிறார் .

‘இந்த அரசாங்கத்தால் இன்றுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்து வன்முறை சூழல் நாட்டில் உருவாகும் என்றும், தமிழ் மக்கள் பஞ்சத்தை எதிர்கொள்ள தேவையான உற்பத்தி மற்றும் பங்கீட்டு பொறிமுறைகளை உடன் உருவாக்க வேண்டுமே தவிர அரசியல் வன்முறைகளில் பலியாகிவிடக் கூடாது என்றும் கடந்த வருடத்திலிருந்து எச்சரித்து வந்த நிலையில் இன்று அந்த நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

தமிழ் அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் முதலீடாக இன்றைய நெருக்கடியை பயன் படுத்துவது நேர்மையற்ற செயல் என்றும் கடந்த வாரம் ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தைக்கு போனவர்கள் இந்தவராம் #Go Home Gota என்று போராட அழைப்பது அரசியல் வஞ்சகம் என்றும், அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இளைஞர்களை இருக்குமாறும் அவர் வேண்டுனோள் முன்வைத்துள்ளார்.

சமூகத் தலைவர்கள் முன் வந்து இன்றைய நெருக்கடி நிலைமையைக் கையாள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

இன்றைய பொருளாதார அரசியல் நெருக்கடி பற்றிய அவரது காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது: