உலகளாவிய ரீதியில் உணவு பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு!

0
441

உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை மார்ச் மாதத்தில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக பிரதான தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களின் விநியோகம் சந்தைகளில் தாக்கதத்தை ஏற்படுத்திய நிலையிலேயே இந்த விலையுயர்வுகள் பதிவாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் உணவு விலைக் குறியீடு கடந்த மார்ச் மாதத்தில் சராசரியாக 159.3 புள்ளிகளாக இருந்தது,

அது பெப்ரவரியில் இருந்து 12.6 சதவீதமாக அதிகரித்தது.

இந்தநிலையில் குறியீட்டின் மார்ச் 2021 ஐ விட 33.6 சதவீதம் அதிகமாகும் என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தானிய விலைக் குறியீடு கடந்த பெப்ரவரியில் இருந்ததை விட மார்ச் மாதத்தில் 17.1 சதவீதம் அதிகமாக இருந்தது,

உக்ரைனில் இடம்பெறும் போரின் விளைவாக கோதுமை மற்றும் அனைத்து தானியங்களின் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளன.

ரஸ்ய கூட்டமைப்பு மற்றும் உக்ரைன் ஆகியவை கடந்த மூன்று ஆண்டுகளில் உலக கோதுமை மற்றும் மக்காச்சோள ஏற்றுமதியில் முறையே சுமார் 30 சதவீதம் மற்றும் 20 சதவீதத்தை கொண்டிருந்தன.

எனினும் போர் காரணமாக அந்த ஏற்றுமதியி;ல் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் உலக கோதுமை விலை 19.7 சதவீதம் உயர்ந்தது. காய்கறி எண்ணெய் விலைக் குறியீடு 23.2 சதவீதம் உயர்ந்தது.

சூரியகாந்தி விதை எண்ணெய் ஏற்றுமதியி;ல் உக்ரைன் உலகின் முன்னணி நாடாக உள்ளது.

நடப்பு போர் காரணமாக அதிக சூரியகாந்தி விதை எண்ணெய் விலை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் விளைவாக பாம், சோயா எண்ணெய்யின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.