விடுதலை புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இலங்கையையும் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார்! போராட்டக் களத்தில் பெண் பெண்

0
59

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார், எம்மையும் காப்பாற்றியிருப்பார் என போராட்டக் களத்தில் நின்று போராடிய பெண் ஒருவர் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற பாரிய போராட்டத்தில் கலந்து கொண்ட போதே குறித்த பெண் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, இன்று மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர், வெட்கமாக உள்ளது. கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த அனைவரும் இன்று துயரத்தில் உள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார், எம்மையும் காப்பாற்றியிருப்பார்.

எங்கேயும் சென்று நாம் கைநீட்டி கடன் வாங்கத் தேவையில்லை. பிரபாகரன் உதவி செய்திருப்பார். இந்த நாட்டில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கின்றது. இதற்குமேலும் இங்கு இருக்க முடியாது என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.