மீண்டும் நிதியமைச்சை பொறுப்பேற்ற அலி சப்ரி!

0
73

தற்போதைய சூழ்நிலையில் விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுவதால் யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை எனவும் எனவே மீண்டும் நிதி அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு தேவையானவற்றைச் செய்ய நான் நிதி அமைச்சராகத் தொடர்ந்து இருக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் அலி சப்ரி தெரிவித்தார்.

முன்னதாக நிதியமைச்சராக பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் அவர் அந்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக அரசுத் தலைவருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.