போராட்ட களத்தில் காவல்துறை அதிகாரிக்கு ரோஜா பூவொன்றைக் கொடுத்துள்ள இளம் பெண்

0
77

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இளம் பெண் ஒருவர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு ரோஜா பூவொன்றைக் கொடுத்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் களனியிலிருந்து நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடைந்தது.

பேரணியை அடுத்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் காவல்துறையினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னே செல்லவிடாது தடுத்தனர்.

இதன்போது இளம் பெண் ஒருவர் கையில் ரோஜாவுடன் காவல்துறையினரை நோக்கி நடந்து சென்றார். பின்னர் ஒரு காவல்துறை அதிகாரியிடம் அதனை கொடுத்த நிலையில் அவர் அதனை பெற்றுக் கொண்டார்.