இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு போர்ச்செலவீனங்களே காரணம் – சுதன்ராஜ்

0
81

சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக்காரணம் என்ன என்பதை சிங்கள கட்சிகளும் பேசவில்லை மாறாக சர்வதேச ஊடகங்களும் பேசவில்லை.

ஆனால் இந்த பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் கொரோனா உட்பட பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். எனினும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இலங்கையில் இடம்பெற்ற போருக்கான செலவீனங்களே இன்று உச்சம் பெற்று இந்த நிலைக்கு தள்ளியுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் சுதன்ராஜ். ஐபிசி தமிழுக்கு அவர் அளித்த விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விரிவாக அவர் தெரிவிப்பதை காணொலியில் காணலாம்