இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர அறிவுறுத்தல்!

0
88

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவான விவாதங்களை ஆரம்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளிவர ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்து தரப்பினரையும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, இலங்கையில் அவசர காலச் சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையானது சாதகமான நிலை என்றும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.