ரசிகர்களை எச்சரித்த விஜய்! இந்த போட்டோ தான் காரணம்

0
102

நடிகர் விஜய் நேற்று இரவு திடீரென தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருகிறார். அதில் அரசியல் தலைவர்கள், அரசு பதவியில் இருப்பவர்களை பற்றி கேலியாக சித்தரித்து மீம் வெளியிடக்கூடாது என கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து செய்தால் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

இந்த அளவுக்கு கோபமாக விஜய் ஒரு சுற்றறிக்கை அனுப்ப காரணம் ஒரு போட்டோ தான். சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் பட ட்ரைலரில் விஜய் காவி நிற பேனரை கிழிப்பது போல காட்சி இருந்தது. அதில் பிரதமர் மோடியின் போட்டோவை வைத்து சிலர் போட்டோஷாப் செய்து வெளியிட்டு உள்ளனர். மோடியின் முகத்தில் விஜய் கத்தி வைத்து இருப்பது போல அதில் இருந்தது.

இது பற்றி பாஜகவை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் விஜய் ரசிகர்களை எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.