பெரும் விபத்தில் இருந்து தெய்வாதீனமாக தப்பிய விமானம்!

0
174

பாரிஸ் வந்த ‘ஏயார் பிரான்ஸ்’ ‘போயிங்’ விமானம் ஒன்று பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சமயத்தில் திடீரென ஏற்படவிருந்த அனர்த்தம் தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானம் தரையிறங்கும் சமயம் அதன் தரையிறக்கக் கட்டுப்பாடு செயலிழந்த தாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ஜோன் எப் கென்னடி (John-Fitzgerald-Kennedy Airport) விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை பாரிஸ் றுவாஸி விமான நிலை யத்தில்(Roissy-Charles-de-Gaulle) இறங்கிய “போயிங் 777” (Boeing 777) விமானமே பெரும் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

விமானிகளுக்கும் கட்டுப்பாட்டு நிலை யத்துக்கும் இடையிலான உரையாடல் களில் விமானி பதற்றமடைந்து பேசிய வீடியோக் காட்சி பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 200 அடி உயரத்தில் பறக்கையில் அதன் தரையிறங்கும் தொழிற்பாடு கட்டுப்பாட்டை இழந்ததில் விமானம் இறங்கவேண்டிய திசைக்கு எதிராக இடப்பக்கமாகத் திரும்பியுள்ளது.

இதனையடுத்து விமானி தனது மிகையான முயற்சியால் (managed to overshoot) விமா னத்தை அது ஏனைய விமானங்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக விமான நிலையத்தின் மறு பக்கத்தில் உள்ள மற்றொரு ஓடு பாதையில் அவசரகட்டத் தரையிறக்கத்தை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் சிவில் விமானப் பாதுகாப்புப் பகுப்பாய்வுப் பணியகம் (Bureau of Investigation and Civil Aviation Safety Analysis – BEA) விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.

அதேவேளை ஏயார் பிரான்ஸ் நிறுவனத்தின் இந்தபோயிங் விமானம் 17 ஆண்டுகளுக்குமுன்பு சேவையில் சேர்க்கப்பட்டது என்றும் அது போன்ற விமானங்களுக்குப்பதிலாக தற்சமயம்”ஏயார் பஸ்-350″ ரக விமானங்கள் பதிலீடு செய்யப்பட்டு வரு கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.