“இடம்பெற்று வரும் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்கவும்” – சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை

0
171

போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதால், குழந்தைகளின் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, விபத்துக்கள் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது உறுதிபூண்டுள்ளது.