ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை பலியெடுத்த கோர விபத்து!

0
169

தனமல்வில – உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.