2022ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி! ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவிப்பு

0
425

2022ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத வீழ்ச்சியை அடையலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.

வருடாந்த அறிக்கையான ‘Asian Development Outlook’ ஐ மேற்கோள் காட்டி, இலங்கையின் GDP வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.4% ஆக குறையும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, தெற்காசியாவில் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும். 2023ல் இது 2.5% ஆக சற்று உயரலாம் என்றும் கணித்துள்ளது.

இந்த ஆண்டு தெற்காசியாவில் மிக உயர்ந்த பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாற உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இலங்கையில் பணவீக்கம் 13.3% ஆக உயரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.