நாடாளுமன்றத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் தொடர்பில் வெளியான தகவல்

0
277

நாடாளுமன்றத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குள் முழுமையாக முகத்தை மறைத்து நுழைந்தவர்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உயர்மட்ட உத்தரவின் பேரில் அங்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இருவரில் பொலிஸாருடன் மோதலை ஏற்படுத்திக் கொண்டவர் இராணுவ மேஜர் என உள்ளக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு முன்னும் பின்னும் எட்டு என்ற இலக்கத்தைக் குறிப்பிட்டு மூன்று தடவைகள் போராட்டத்திற்குள் நுழைய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்தில் இந்த மோட்டார் சைக்கிள் கும்பல் நுழைந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். அதில் மூன்று முறை பொலிஸாரை மோதிவிட்டு செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிளை பிடித்து சாவியை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் போதே பொலிஸாருக்கும் இந்த கும்பலும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸாருடனான மோதலின் போது இராணுவ மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மேஜர் என்பது தெரியவந்துள்ளது. உயர்மட்ட உத்தரவின் பேரில் தான் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, இரண்டு இராணுவ வீரர்களின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன