இலங்கையின் நெருக்கடி நிலைமையை ஆராயும் மூன்று தமிழர்கள் அடங்கிய குழு

0
273

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை ஆராயும் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இதில் முக்கிய பொறுப்பினை மூன்று தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கு வழிவகுக்கும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன், சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷர்மினி கூரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல் என்பன ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்களாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.