யாழில் காணாமல் போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு!

0
77

 யாழில் காணாமல் போன பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி அரியாலை,மணியந்தோட்டம் பகுதியில் காணாமல் போன குடும்ப பெண் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கொலைக்கு ஆளாக்கப்பட்ட நபர் ஜெசிந்தா என்பதும், சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து புதைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்களோடு இவர்களுக்கு உதவிய இளைஞன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜெசிந்தா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரிடம் 3 லட்சம் கடன் பெற்ற நபரிடம் பணத்தைக் கேட்ட ஜெசிந்தாவை கடன் பெற்ற நபர் கொலை செய்துள்ளார். மேலும் பெண்ணின் சடலத்தையும் அவரது மோட்டார் வாகனத்தையும் தனது வீட்டின் பின்புறத்தில் கணவன் , மனைவி புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் தாயைக் காணாததை தொடர்ந்து மகன் செய்த முறைப்பாட்டின் போதே பொலிஸார் நடத்திய விசாரணையில் கணடறியப்பட்டது.