பதவி விலகிய அமைச்சர்கள் அதிகாரபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என தகவல்

0
53

பதவி விலகிய அமைச்சர்கள் இன்னமும் அதிகாரபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

எனினும் இந்த அமைச்சர்கள் அதிகாரபூர்வ வாகனங்களை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி, 24 மணி நேரம் கூட புதிய பதவியில் நீடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.