நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா! விசேட குழுவை நியமித்தார் கோட்டாபய

0
59

பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான அரச தலைவர் ஆலோசனைக் குழு ஒன்றை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

அவ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள்,

1. இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான இந்திரஜித் குமாரசுவாமி.

2. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயிற்சி பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன்.

3. சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு முன்னாள் இயக்குனர், சர்வதேச நாணய நிதியத்தின் ஆப்பிரிக்கா துறை முன்னாள் துணை இயக்குனர் ஷர்மினி குரே.

அரச தலைவர் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. 

Gallery