நாட்டை வந்தடைகிறது 40,000 மெற்றிக் தொன் அரிசி!

0
88

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளதாக வர்த்தக அமைச்சுஅறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி, சம்பா, சிவப்பரிசி உள்ளிட்ட 40,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தவுடன் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச கிளை வலையமைப்பிற்கு விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும், சிவப்பரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும், சம்பா அரிசி கிலோ 130 ரூபாவிற்கும் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் என அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல்கள் இலங்கை்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.