இன்றைய ராசிபலன் {07ஏப்ரல் 2022}

0
87

மேஷம்

மேஷ ராசிக்கு இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் சிறப்பான வெற்றியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சு செயலில் கவனமுடன் இருக்கவும். உத்தியோகத்தில் கருத்து வேறுபாடுகளிலிருந்து விலகி இருங்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப பிரச்னைகள் தீர மனம் விட்டுப் பேசினால் சங்கடம் தீரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு இன்று புதிய உற்சாகம் ஏற்படும். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் செய்வதற்கு ஆலோசனையும், கவனமும் தேவை. உத்தியோகஸ்தர்கள் முக்கியப் பொறுப்புகளைக் கையாள்வீர்கள். இன்று உங்கள் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். வீடு, வேலை போன்ற மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு, புதிய வீடு வாங்கலாம். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை சீராக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினர் உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும். தொழிலில் சில பெரிய சாதனைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கலாம். உத்தியோகஸ்தர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும், சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். வீட்டில் பெரியவர்களை மதிப்புடன் நடந்து கொள்ளவும்.

கடகம்

கடக ராசிக்கு மிக சிறப்பான நாளாக இருக்கும். எந்த வகையான பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வேலை தொடர்பான விஷயத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

நேயர்களே நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வதால் உறவுகள் சிறக்கும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் லாபகரமான பலன்களே ஏற்படும். வயதில் மூத்தவர்கள் உடன் பேசும்போது பேச்சில் சற்று நிதானமாக இருப்பது அவசியம். முடிந்தவரை அனைத்து விஷயங்களிலும் நிதானமாக செயல்படுவது தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி

நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் ஆதாரமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களின் அனுசரணை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது

கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் சாதகமான பலன்கள் பெறலாம். முடிந்தவரை தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்

நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றக்கூடிய யோகம் உள்ளது. நல்ல நட்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்கு இருந்த அலைச்சல் மன அழுத்தம் எல்லாம் விலகி மன நிம்மதி பெறுவீர்கள்.

பிள்ளைகள் வழியில் இந்த சிறிய பிரச்சனை கூட நீங்கி மன நிம்மதி கூடும். உடனிருப்பவர்களின் ஆதரவு மிக நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது

விருச்சிக ராசி

நேயர்களே உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவாக சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கூட்டாளிகளுடன் மட்டும் சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. சுக போக பொருட்களை அனுபவிப்பதற்கு கூட தேவையற்ற தடை ஏற்படும். அதிக அலைச்சல் உண்டாகும் என்பதால் உடல் அசதி ஏற்பட வாய்ப்புள்ளது. நிதானத்துடன் செயல்படுவது தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி

நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் வளமும் வலிமையும் அதிகமாக இருக்கக்கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றக்கூடிய அமைப்பு உள்ளது. நல்ல நட்புகள் உங்களைத் தேடி வரும்.

தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். நண்பர்கள் மூலமாகவே சில அனுகூலங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்க கூடிய யோகம் இன்று உண்டு.

மகரம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஒரு சில நாட்கள் கால தாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும்.

உணவு தொழில் சுற்றுலா தொழில் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானத்தை கொடுத்துவிடும் பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும்.

கும்பம்

சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.

குடும்பத்தில் உங்கள் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

மீனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மை உண்டாகும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்றுக் இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

புதிய தொழில் பற்றிய சிந்தனைகள் மனதில் மேலோங்கி நிற்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் சற்று பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.