இன்று முதல் வீடுகளிலிருந்து பணி புரியவுள்ள விமான நிலைய ஊழியர்கள்!

0
87

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை இன்று முதல் வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆலோசனையை விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் இன்மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரச பையின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.