ஆர்ப்பாட்டக்கார்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு! மறுத்த அனுரகுமார திஸாநாயக்க

0
166

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தும் சிலருடன் இரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மறுத்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டி விட்டதாக அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியது.

அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

இதன்போது அவர், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு அநுரகுமார திஸாநாயக்க ஆர்ப்பாட்டக்காரர்களை வலியுறுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.

அநுரகுமார திசாநாயக்க, தனது வாகனத்தில் எதிர்ப்பாளர் ஒருவரை ஏற்றி வந்ததாகவும் அவர் கூறினார்

இந்தநிலையில் அநுரகுமார திசாநாயக்க, தான் எதிர்ப்பாளர்களுடன் பேசியதை ஒப்புக்கொண்டார்,

எனினும் அவர்களைத் தூண்டிவிட முயன்றதாகக் கூறப்பட்டதை அவர் மறுத்தார்.