USA, தமிழ்நாடு எல்லா இடத்திலும் மாஸான விஜய்யின் பீஸ்ட் புக்கிங்- செம அதிரடி

0
451

விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இளம் இயக்குனர் நெல்சன் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெட்ச் நாயகியாக நடித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யை தாண்டி படத்தில் பெரிய விஷயம் என்னவென்றால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தான். அவர்கள் ஒரு படத்தை எந்த அளவிற்கு புரொமோஷன் செய்வார்கள் என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான்.

படத்திற்கு தடை

பீஸ்ட் படத்தை குவைத் நாட்டில் திரையிட அந்த அரசு மறுத்துள்ளது. காரணம் படத்தில் தீவிரவாதத்தை பற்றி பேசும் காட்சிகள், வசனங்கள் இருப்பதால் படத்தை திரையிட மறுத்துள்ளனர்.

குவைத் எடுத்த முடிவை சில நாடுகளில் எடுக்கப்படலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.

ஆனால் இதுவரை குவைத் தவிர வேறு எந்த இடத்திலும் பிரச்சனை இல்லை என்று தான் தெரிகிறது.

பட புக்கிங் தகவல்

பீஸ்ட் திரைப்படம் USAவில் மட்டும் 75 லட்சத்திற்கு புக்கிங் செய்யப்பட்டிருக்கிறதாம், இது பெரிய அளவு வரவேற்பு என்கின்றனர். அதோடு தமிழ்நாட்டிலும் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே புல் ஆகியுள்ளதாம்.