இப்போது உலகிலேயே சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டுடையது தெரியுமா? அதிலும் ரஷ்யாவை முந்திய உக்ரைன்…

0
502

உலகிலேயே சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் (பாஸ்போர்ட்)கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

ஒரு நாட்டு மக்கள், தங்கள் பாஸ்போர்ட்டைக் கொண்டு, விசா இல்லாமலே எத்தனை நாடுகளுக்குச் செல்லமுடியும் என்பது போன்ற சில விடயங்களின் அடிப்படையில், சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்னும் விடயம் தீர்மானிக்கப்படுகிறது.

அவ்வகையில், Henley Passport Index சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 192 நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்லலாம் என்பதால், அந்த இரண்டு நாடுகளுமே பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

190 நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்லலாம் என்பதால், ஜேர்மனியும் தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளன.

மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொள்பவை பின்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள். அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுடன், விசா இல்லமாலே 189 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.

பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பிரித்தானியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேற, அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின், உக்ரைன் 34ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது, ரஷ்யாவோ, 46ஆவது இடத்திலிருந்து 49ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அது இன்னமும் கீழிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது ஆப்கானிஸ்தான்.

இலங்கை, 103ஆவது இடத்தில் உள்ளது…