விக்ரமிற்கு வில்லனாகும் விஜய்.. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் வேற லெவல் ரீ என்ட்ரி

0
78

முருகதாஸ் ரீ-என்ட்ரி

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை.

இந்நிலையில், தோல்விக்கு பின் மீண்டும் தமிழில் வேற லெவல் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் முருகதாஸ்.

ஆம், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் கமிட்டாகியுள்ளார் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் – விஜய் சேதுபதி

அதன்படி, இப்படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.