முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் அஜித்தின் வலிமை – எப்போது தெரியுமா?

0
76

அஜித்தின் வலிமை இந்த வருடத்தில் செம ஹிட்டடித்த முதல் திரைப்படம். எல்லா ஏரியாக்களிலும் படத்தின் வசூலுக்கு குறையே இல்லை.

எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது.

படத்தின் வசூல்

ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் அஜித்தை தாண்டி நிறைய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் தான் அதிகம் ரசிக்கப்பட்டன.

தற்போது படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் பட லிஸ்டில் உள்ளது.

தொலைக்காட்சியில் வலிமை

அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை தாண்டி OTTயிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது என்ன தகவல் என்றால் படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். 

ஜீ தமிழில் வரும் மே 1ம் தேதி அதாவது அஜித்தின் பிறந்தநாள் அன்று ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.