பிரதி சபாநாயகரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்தார் அரச தலைவர்

0
98

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச.

அவரை தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருக்குமாறும் அரச தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானத்ததை தொடர்ந்து பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியும் தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.