நாளைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணி எதிராக போராட்டம்!

0
61

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசுக்கு எதிரான போராட்டத்தை நாளைய தினம் தலவாக்கலை நகரில் நடாத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஊரங்கு சட்டம் காரணமாக அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில் பிற்போடப்பட்ட போராட்டத்தை நாளை நடாத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

நாளைய தினம் குறித்த போராட்டத்தை நடாத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.