நாட்டின் நெருக்கடி குறித்து இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்

0
59

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், தொடர்ச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்து இன்றைய நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற ஒத்திவைக்குப்பிற்கு பின்னர் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி, நாட்டில் சமகால நிலைமை தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.