உக்ரைனில் மாமியார் சடலத்தை கூட பார்க்காத மருமகள்! படகில் மாயமான 4 வயது மகன்

0
97

உக்ரைன் முழுவதும் தேடப்பட்டு வந்த 4 வயது சிறுவன் Sasha சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் சண்டை தொடங்கிய நிலையில் ரஷ்ய வீரர்களால் உக்ரைன் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பாட்டியுடன் படகில் ஏறி சென்ற சிறுவன்

போர் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை பலரும் இழந்து தவிக்கின்றனர். அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 10ஆம் திகதி Sasha என்ற 4 வயது சிறுவன் தனது பாட்டியுடன் படகில் ஏறி போர் சூழலில் இருந்து தப்ப முயன்றிருக்கிறான்.

Sasha எங்கேயாவது உயிருடன் இருப்பான் என அவன் பெற்றோர் உறுதியுடன் நம்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களின் நம்பிக்கை வீணாய் போயுள்ளது, அதன்படி ரஷ்ய படையினரால் Sashaவும் அவன் பாட்டியும் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை Sashaவின் தாயார் அன்னா யாக்னோ உறுதி செய்துள்ளார். அன்னா கூறுகையில், எங்கள் குட்டி தேவதை சொர்க்கத்தில் உள்ளான். அவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அவன் இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சி தகவல் ஒரு மாதம் கழித்து வந்துள்ளது. இந்த தேடலில் உதவிய அனைவருக்கும் நன்றி, உங்கள் பிரார்த்தனை மற்றும் நம்பிக்கைக்காகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தாயார் உருக்கம்

அவனுடன் இருந்த என் மாமியார் சடலம் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர் உடலை அடக்கம் செய்ய உள்ளூர் மக்களை கேட்டு கொண்டோம், அனைவரின் ஆதரவுக்கும் நன்றி என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த மரணத்தை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என உக்ரைன் நாடாளுமன்றத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.