இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

0
75

இலங்கையில் இன்று தங்க விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 175,800 ரூபாவாகவும் மற்றும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 190,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்தில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 195,000 ரூபாவாகும் மற்றும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 205,000 ரூபாவாகும் கொழும்பு செட்டித் தெருவில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 250,000 ரூபா வரை அதிகரித்துக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.