அவசர அவசரமாக டுபாய் பறந்த கோட்டாபயவின் குடும்ப உறுப்பினர்!

0
83

மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ச நேற்று நாட்டை விட்டு வெளியேறி டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

இதன்படி, நிரூபமா ராஜபக்ச நேற்று இரவு 10.25 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-655 விமானத்தில் சென்றுள்ளார் எனவும் அவர் டுபாய் பயணித்துள்ளார் எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்துள்ள பிரபலங்களின் பெயர்கள் உள்ளடங்கிய பண்டோரா பட்டியலில் நிரூபமா ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.