19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்: சிறிலங்கா நாடாளுமன்றில் மைத்திரி பகிரங்க கோரிக்கை

0
61

’20வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும், எனது அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும்’ என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியும் எனவும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுத்தாவது,

நாட்டில் மிக மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ள நேரத்தில் கமத்தொழிலாளர்களின் பயிர் செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கமத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் நாடு சர்வதேச ரீதியில் அந்நியப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளும். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லது சர்வதேச ரீதியாகவும் நன்மை தரும் விடயமாக இருக்காது.