அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோட்டம் ! விமான நிலையத்தில் cctv இயங்கவில்லை

0
357

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக துபாய் நாட்டுக்கு சென்றதாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3.15 அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-649 என்ற விமானத்தில் அவர் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதேவேளை நிஷசங்க சேனாதிபதியின் புதல்வர், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நேற்று ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவு புறப்பட்டுச் சென்றார்.

சேனாதிபதி மற்றும் அவரது புதல்வர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது விமான நிலையத்தின் கணனி கட்டமைப்பு மட்டுமல்லாது பாதுகாப்பு கெமராக்களும் இயங்க முடியாத சிக்கலான நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனால், நாட்டு மக்களின் செல்வங்களை கொள்ளையிட்டவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

 இதனால், நாட்டு மக்களின் செல்வங்களை கொள்ளையிட்டவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

பொது மனுவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிஷசங்க சேனாதிபதியை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறும் எனவும் அவர் சபாநாயகரிடம் கோரிக் விடுத்தார்.

நிஷசங்க சேனாதிபதியை உடனடியாக கைது செய்யவே தான் இந்த பொது மனுவை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.