வவுனியாவில் அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் – இளைஞனின் செயலால் ஏற்பட்ட பரபரப்பு!

0
80

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் சிலர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பைத்தியம் பைத்தியம் கோட்டாபயவுக்கு பைத்தியம், ஊரடங்குதான் முடிவென்றால் நீ ஒரு மாடு, சிங்களவர் கிளர்ந்தெழுந்ததால் நீ வீட்டுக்குப்போ, பருப்பு விலை வானமளவு, எரிவாயுவை காணகிடைக்கவில்லை என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டவேளை அவர்களின் பின்புறமாக நின்ற இளைஞரொருவர் குப்பைகள் அடங்கிய பெட்டியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தூக்கி எறிந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் இளைஞர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் சிறிது நேரத்தில் போராட்ட இடத்திற்கு மறுமுனையில் இருந்த எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery