போராட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

0
58

இலங்கை அண்மைக்காலமாக டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

பொருளாதார நெருக்கடியால் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், விலைவாசியும் உயர்ந்துகொண்டே செல்கின்றது.

 இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சில தினங்களாக நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அரசாங்கத்திற்கு எதிராக கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.