நாட்டின் இன்றைய அராஜக நிலைக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு! நாடாளுமன்றில் குற்றம் சுமத்திய ஆளும் கட்சி!

0
72

கோட்டா கோ ஹோம் என்பதை தாமே முதன் முதலாக கூறியதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசியலில் பிரதேசசபையில் கூட அங்கம் வகிக்காத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டாம் என்று மஹிந்த ராஜபக்சவை கேட்டுக்கொண்டபோதும் அதனை அவர் கேட்கவில்லை.

அவர் தமது குடும்பத்துக்கு முதலிடம் கொடுத்து கோட்டாபயவை வேட்பாளராக நியமித்தார்.

கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டாம் என்று தாம் கேட்டுக்கொண்டபோது தமது ஆதரவாக வாசுதேவ நாணயக்கார செயற்பட்டார்.

எனினும் இரண்டு வாரத்துக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்காரவை தம்பக்கத்துக்கு இழுத்துக்கொண்டதாக குமார வெல்கம குறிப்பிட்டார்.

எனவே நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அராஜக நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது இன்று கடவுள் சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீதிகளில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இதேவேளை மைத்ரிபால சிறிசேன வாயை திறந்தால் பொய்யை மாத்திரமே பேசுவதாக வெல்கம குறிப்பிட்டுள்ளார்.