நாடாளுமன்றில் நாமல்! வெளியானது ஆதாரம்

0
53

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு சமூகமளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் குறித்த தகவலில் உண்மையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ச, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே நாமல் ராஜபக்ச தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார். தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நாமல் ராஜபக்சவின் குடும்பம் டுபாயிலிருந்து மேற்கத்திய நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.