சொந்த வீடுகளை விட்டு தலைமறைவாகிய முன்னாள் அமைச்சர்கள்! வெளிநாடுகளுக்கு தப்பியோட தயாரா ?

0
89

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவர்களில் பிரபலமான முக்கிய அமைச்சர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களில் சுமார் 20 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கி இருக்க முடியாது சில பிரபலமான ஹொட்டல்களில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கஷ்டங்கள் காரணமாக மக்கள் அரச தலைவர், அரசாங்கம் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் அமைச்சர்களின் வீடுகளுக்கு எதிரில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அமைச்சர்கள் தமது சொந்த வீடுகளுக்கு செல்லாது கொழும்பில் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.