ஒரே நாளில் வைரலான 10 வயது சிறுமியின் புகைப்படம்!

0
63

தனது தங்கையை மடியில் படுக்கவைத்தபடி, பள்ளியில் பாடத்தை கவனித்துவரும் 10 வயது சிறுமியின் புகைப்படம் வைரலானது.

மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் நாகா இனமக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இங்குள்ள டைலாங் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மெய்னிங் சின்லியு பேமே(10 வயது) என்ற சிறுமி படித்து வருகிறார்.

பொருளாதார நெருக்கடி காரணமாகவும், தொடர்ச்சியான வறுமை காரணமாகவும் பெற்றோர் இருவரும் விவாசயத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.  

எனவே வீட்டில் இருக்கும் தன்னுடைய தங்கையை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாமல் தனது தங்கையையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறார்.

தங்கையை மடியில் படுக்கவைத்தபடி, இவர் பாடத்தை கவனிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தகுந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு, சிறுமியின் துயரங்களை மீட்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் வலுத்தது.

இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநில அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை குழந்தைக்கு ஆதரவு கரங்கள் நீட்டத் தொடங்கின.