இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பு; எதிர்க்கட்சி நிராகரிப்பு

0
53

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நிராகரித்துள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “பொதுமக்களின் வேண்டுகோள் கோட்டா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே, நாங்கள் அந்த போக்கை ஆதரிப்போம் மற்றும் ராஜபக்ஷர்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.