இன்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள்!

0
267

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கை ரூபாயானது பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக நிலையானதாகவே உள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 289 ரூபா 72 சதமாகவும் விற்பனை விலை 299 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 380 ரூபா 53 சதம், விற்பனை விலை 394 ரூபா 92 சதமும் ஆகும்.

யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 323 ரூபா 18 சதம் விற்பனை விலை 334 ரூபா 50 சதம்.

இத்துடன் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் விலை 2 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 46 சதம்.