அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள சிறி லங்கா சுதந்திரக் கட்சி!

0
260

சிறி லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.

அதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

மேலும், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நாளை (05) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.