பொலிஸாரை நிலைகுலைந்து ஓட வைத்த பல்கலைக்கழக மாணவர்கள்

0
111

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த போதும், மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது முறுகல் நிலை ஏற்பட்டது.

மாணவர்களுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. இதன்போது மாணவர்களும் பதிலுக்கு கண்ணீர்புகை அடித்தமையினால் பொலிஸார் நிலைகுலைந்து ஓட்டம் எடுத்துள்ளனர்.